சென்னை:ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், நேற்று நள்ளிரவு சென்னை சா்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்பட இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக தாமதமானது.
இந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகள் 138 பேரும் மாலை 6 மணிக்கு முன்னதாகவே விமான நிலையம் வந்து, பாதுகாப்பு, சுங்கம்,குடியுரிமை,மருத்துவ பரிசோதனை உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்த நிலையில், பயணிகளை விமானத்தில் ஏற்றுவதற்கு முன்னதாக விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விமானம் காலதாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. விமான பொறியாளர்கள் வந்து விமானத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் நள்ளிரவு 1 மணி ஆகியும் விமானம் புறப்படவில்லை.