சென்னை திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் உபயதுல்லா (39). இவருக்கு மனைவி நஸ்ரின் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதியும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த மனைவி நஸ்ரின், அடுப்பில் சூடாக இருந்த எண்ணையை எடுத்து கணவர் மீது ஊற்றியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய உபயதுல்லாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது, உடல் முழுவதும் வெந்த நிலையில் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.