சென்னை: தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சிகுட்பட்ட வெங்கம்பாக்கம் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன.
இந்த நிலையில் கடந்த மூன்று நாள்களாகப் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, ஏரிகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வெங்கம்பாக்கம் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமலும், அத்தியாவசிய பொருள்கள் வாங்க வெளிய செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும், குடியிருப்புப் பகுதியிலிருந்து மழைநீரை வெளியேற்றுவதற்காகச் சாலையின் குறுக்கே 10 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் கேளம்பாக்கம், மப்பேடு செல்லக்கூடிய சாலையில் போக்குவரத்து முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையைக் கடக்க அப்பகுதி மக்கள் மழை நீர் செல்லும் பள்ளத்தின் நடுவே ஏணியைக் கொண்டு ஆபத்தான முறையில் கடந்துசெல்கின்றனர்.
தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சிகுட்பட்ட வெங்கம்பாக்கம் பகுதியில் இருக்கும் மழை வெள்ளம் அப்பகுதியில், மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்து சில குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதால் மழைநீர் தேங்கியுள்ளதாகவும், இதற்கு அலுவலர்கள் உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:ஸ்டாலின் அரசியல் நாடகமாடுகிறார் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு