தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை புறநகர் சிறப்பு ரயில்கள் சேவையில் மாற்றம் - புதிய புறநகர் ரயில் அட்டவணை

சென்னை: பிப்ரவரி 24 முதல் மார்ச் 13ஆம் தேதி வரை தாம்பரம் - செங்கல்பட்டு மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

chennai suburban train
சென்னை புறநகர் ரயில்

By

Published : Feb 23, 2021, 9:48 PM IST

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கிடையே மூன்றாவது ரயில்பாதைப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் தாம்பரம் ரயில் நிலையத்தைக் கடந்து செல்லும் புறநகர் சிறப்பு ரயில்களில் சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், தடையில்லா சேவை வழங்கிட புதிய கால அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய திருத்தப்பட்ட புறநகர் சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணை 2021 பிப்ரவரி 24 முதல் மார்ச் 13 வரை மட்டுமே அமலில் இருக்கும்'

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் - மின் வணிக ஆய்வாளர் கைது!

ABOUT THE AUTHOR

...view details