தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அத்துமீறி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு: ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு!

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டம் நடத்திய வழக்கில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட ஏழு பேர் நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.

protest
protest

By

Published : Dec 24, 2019, 1:13 PM IST

2018ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, முழு அடைப்புப் போராட்டமும், ஆர்ப்பாட்டமும் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளால் நடத்தப்பட்டன.

சென்னை அண்ணா சாலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்ட அந்த ஆர்ப்பாட்டத்தில், அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சியிலிருந்த கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதனையடுத்து, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளிலும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மு.க. ஸ்டாலின், தொல். திருமாவளவன், ஜவாஹிருல்லா, சரத்குமார், காதர் மொய்தீன், திருநாவுக்கரசர், கராத்தே தியாகராஜன் ஆகியோர் டிசம்பர் 26ஆம் தேதி வழக்கின் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ரமேஷ் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தந்தை பெரியார் 46ஆவது நினைவு நாள்: ஸ்டாலின் மரியாதை!

ABOUT THE AUTHOR

...view details