தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Chennai Rain Alert: வெள்ள அச்சத்தால் கார்களை மேம்பாலத்தில் நிறுத்திய மக்கள் - சென்னை மழை நிலவரம்

விட்டுவிட்டு பெய்துவரும் மழையின் (Rain) காரணமாக, வேளச்சேரி மக்கள் தங்களது கார்களை மேம்பாலத்தின் மீது வரிசையாக நிறுத்தியுள்ளனர்.

Chennai Rain Alert
Chennai Rain Alert

By

Published : Nov 18, 2021, 9:44 PM IST

சென்னை: சென்னை - வேளச்சேரி பழைய மேம்பாலத்தின் மீது வேளச்சேரி ராம்நகர் மக்களும் மழை நீர் தேங்கும் குடியிருப்புவாசிகளும், மழைவெள்ளத்தில் (Flood) இருந்து தங்களது கார்களைப் பாதுகாக்கும் வகையில், மேம்பாலத்தின் மீது அதனை வரிசை கட்டி நிறுத்தியுள்ளனர்.

நேற்று (நவம்பர் 17) இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பும் இதேபோல் வாகனங்களை நிறுத்தியிருந்தனர்.

மீண்டும் மழை;மேம்பாலத்தில் ஓரங்கட்டப்பட்ட கார்கள்

பின்னர், மழை நீர் வடிந்த பிறகு அங்கிருந்து கார்கள் எடுக்கப்பட்டன. மீண்டும் பெய்து வரும் மழையின் காரணமாக, வேளச்சேரி பழைய மேம்பாலத்தில் கார்கள் ஓரங்கட்டப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

வேளச்சேரி மேம்பாலம்
அதேபோல், மழை நீர் முன்பு தேங்கிய பகுதிகளில் மீண்டும் தேங்கினால், அதனை அகற்றவும், பாதிக்கப்படுபவரை மீட்கவும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தயார் நிலையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:கந்து வட்டிக் கொடுமை - தற்கொலை செய்ய அனுமதிக்கக் கோரி பெண் மனு

ABOUT THE AUTHOR

...view details