சென்னைபுழுதிவாக்கத்தைச் சேர்ந்தவர் பேக்கரி உரிமையாளர் காசி விஷ்வநாதன்(52). ஆதம்பாக்கம், பிருந்தாவன் நகரில் உள்ள அவரது பேக்கரியில் நேற்றிரவு கடையை பூட்டிச்சென்ற காசி விஷ்வநாதன் மீண்டும் இன்று (ஆக.16) காலை போய் திறந்தார். அப்போது அதிர்ச்சிக்குள்ளானார்.
முன்னதாக, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் கல்லாவில் இருந்த ரூ.70,000 பணம் கொள்ளை போயிருந்தது. இது குறித்து ஆதம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.