தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புத்தாண்டு கொண்டாட்டம் - நட்சத்திர விடுதிகளுக்கு கட்டுப்பாடுகள்! - நட்சத்திர விடுதி

சென்னை: புத்தாண்டு வருவதையொட்டி நட்சத்திர விடுதிகள் இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களில் ஈடுபட மாநகர காவல் துறை தடை விதித்துள்ளது.

year
year

By

Published : Dec 28, 2019, 5:51 PM IST

ஆங்கில புத்தாண்டு இன்னும் மூன்று நாட்களில் வருவதை முன்னிட்டு சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவின் பேரில் சென்னை மாநகரம் முழுவதும் அந்தந்தப பகுதிகளில் உள்ள துணை ஆணையர்கள் தலைமையில் நட்சத்திர விடுதி உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புத்தாண்டு தொடர்பாக நட்சத்திர விடுதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  • இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே விடுதிகள் இயங்க அனுமதி.
  • நீச்சல் குளத்தின் மீது மேடை அமைத்து எந்தவித கொண்டாட்டங்களிலோ, மது விருந்துகளிலோ ஈடுபடக்கூடாது.
  • விடுதிக்கு வரும் பெண்களை, அவர்கள் திரும்பி செல்லும்வரை பெண் பௌன்சர்களை வைத்து பாதுகாப்பளிக்க வேண்டும்.
  • புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரக்கூடிய நபர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லும் வரை கண்காணிக்க வேண்டும்.
  • மது போதையில் இருப்பவர்களை விடுதி நிர்வாகம் ஓட்டுநர்களை வைத்து காரில் பாதுகாப்போடு அனுப்பி வைக்க வேண்டும்.
  • மதுபோதையில் யாரேனும் பிரச்னைகளில் ஈடுபட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.

நட்சத்திர விடுதிகளுக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களை சிசிடிவி கேமராக்களை வைத்து நிர்வாகம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

சென்னை மாநகர காவல் துறை விதித்துள்ள இந்தக கட்டுப்பாடுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்ட விடுதி நிர்வாகிகள், புத்தாண்டை மக்கள் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பேரணி!

ABOUT THE AUTHOR

...view details