தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இளம்பெண்ணுக்கு டார்ச்சர்; மூன்றாம் கண்ணில் சிக்கிய போலீஸ்! - இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த காவலர் கைது

சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.

இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த காவலர் கைது.
இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த காவலர் கைது.

By

Published : Feb 3, 2022, 2:49 PM IST

சென்னை:சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் அவர், “கடந்த 30ஆம் தேதி தனது பணியை முடித்துவிட்டு நடந்து சென்றேன். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். நான் பயந்து கூச்சலிட்ட போது தன்னை தகாத வார்த்தையால் திட்டி, போலீசிடம் கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். அந்த நபர் வேகமாகச் சென்ற போது காரில் மோதியதில் விபத்து ஏற்பட்டு காயத்துடனே தப்பிச் சென்றுவிட்டார்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரின் இருசக்கர வாகன எண்ணை வைத்து நடத்திய விசாரணையில், அவர் ஒரு காவலர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த காவலர்கள் அவர் மீது, ஆபாசமாகப் பேசுதல், மிரட்டல், தடுத்தல், பாலியல் தொல்லை மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

காவலர் ஒருவர் மூன்றாம் கண் (சிசிடிவி) என வர்ணிக்கப்படும் சிசிடிவி கேமராவில் சிக்கி கம்பியெண்ணுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:உறவாடிய உறவினர்; களவாடிய திருடன்! - சென்னையில் பரபரப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details