பொதுமக்களைத் தொடர்ந்து கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கும் தொற்று பரவி வருகிறது. குறிப்பாக மாங்காடு, எஸ்பிளனேடு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலைய காவலர்கள் சிலருக்கு கரோனா தொற்று வந்துள்ளதையடுத்து, அந்த காவல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதனால், பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், தகுந்த இடைவெளியை பின்பற்றுவது மற்றும் மக்களை எப்படி கையாள்வது என்பது குறித்து காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் காவலர்களுக்கு அறிவுரை வழங்கிவருகிறார். நேற்று கோயம்பேடு வியாபாரிகள் மற்றும் காவலர்களுக்கு நேரில் சென்று அறிவுறுத்தினார்.
காவலர் குடியிருப்புகளுக்குச் சென்று காவல் ஆணையர் நேரில் ஆய்வு! இந்நிலையில், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த முதல் நிலை காவலருக்கு கரோனா தொற்று பரவி சிகிச்சை பெற்று வருவதால், அவர் வீடிருக்கும் புதுப்பேட்டை நரியங்காடு காவலர் குடியிருப்புக்கு இன்று சென்ற அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரிடம், முகக்கவசம், தகுந்த இடைவெளி ஆகியவற்றை பின்பற்றுவது குறித்தும், பணிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் செய்ய வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.
இதையும் படிங்க: கரோனா தொற்று மையமாக மாறுகிறதா கோயம்பேடு சந்தை?