சென்னை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று வழக்கம் போல் சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் எட்டாவது மாடியில் உள்ள அவரது அறையில் அலுவல் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரது சொந்த வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.