தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'இந்தாண்டு 3 செ.மீ. மழை அதிகமாகப் பதிவாகியுள்ளது' - rain update news

சென்னை: இந்தாண்டு 3 செ.மீ. மழை அதிகமாகப் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென் மண்டல வானிலை துறை தலைவர் பாலசந்திரன் பேட்டி

By

Published : Oct 30, 2019, 5:33 PM IST

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நேற்று குமரிக் கடலில் நிலவிவந்த வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வானது இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது திருவனந்தபுரத்திலிருந்து தென்மேற்கில் 220 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

தென் மண்டல வானிலைத் துறை தலைவர் பாலச்சந்திரன் பேட்டி

அடுத்தடுத்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் அதனைத் தொடர்ந்து புயலாகவும் வலுப்பெறக்கூடும். இது வடமேற்குத் திசையில் லட்சத்தீவைக் கடந்துசெல்லும் என்பதால் தமிழ்நாட்டிற்குப் பாதிப்பில்லை. தமிழ்நாடு, புதுச்சேரியில் சுமார் 80 இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 19 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், குமரி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், பாண்டிச்சேரி, காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, தேனி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார்.

மேலும், குமரிக்கடல், லட்சத்தீவு மாலத்தீவு, தென் தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகள், மன்னார் வளைகுடா, லட்சத் தீவு, தெற்கு கேரளா கடற்கரை பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு வரும் 31ஆம் தேதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரைமழை இயல்பாக 17 சென்டிமீட்டர் பதிவாகியுள்ளது என்றும் இந்த வருடம் 3 செ.மீ. மழை அதிகமாகப் பதிவாகியுள்ளது என்றும் கூறினார்.

இதையும் படியுங்க:

’ஆறுவது சினம்’ என்பதுணர்ந்து முதலமைச்சர் கோபத்தைத் தவிர்ப்பாராக! - மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details