விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் பாரம்பரிய கலைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பாரம்பரிய இசை மற்றும் நடனம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், சென்னை கலை திருவிழா குழு மற்றும் மெட்ரோ ரயில் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலைஞர்கள் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.
பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் - சென்னை மெட்ரோவுடன் இணைந்து கலைஞர்கள் அசத்தல்! - பாரம்பரிய கலை
சென்னை: பாரம்பரிய இசை மற்றும் நடனங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மெட்ரோ ரயிலில் பயணித்தபடி இசை கலைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டினர்.
dance
பின்னர், அங்கிருந்து வண்ணாரப்பேட்டைவரை மெட்ரோ ரயிலில் பயணித்து தெரு நாடகம் , ஒயிலாட்டம், பறையாட்டம், ஒத்த செவுரு போன்ற பல்வேறு நடன மற்றும் இசை நிகழ்ச்சிகளை பயணிகளின் முன்னிலையில் நிகழ்த்தினர். இதனை பயணிகள் ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: நடிகர் சங்கத் தேர்தல் ரத்து: மறுதேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு