சென்னை: வடகிழக்குப் பருவமழை நாளை(ஜன.22) தமிழ்நாடு, புதுச்சேரி, அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 'வடகிழக்குப் பருவமழை விலக வாய்ப்புள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அதேபோல் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.