சென்னை லயோலா கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்து படித்துவந்த ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் மக்கா சந்தோஷ் வம்சி பவன் (22). இவர் அக்கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டயப் படிப்பு படித்துவருகிறார். இவ்வேளையில், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மற்ற மாணவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்குச் சென்றிருந்தனர்.
ஆனால் சந்தோஷ் மட்டும் ஊருக்குச் செல்லாமல் விடுதியில் தங்கியிருந்துள்ளார். பின்னர், அவர் விடுதியில் மாணவர்கள் யாருமில்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து ஊருக்குச் சென்ற மாணவர்கள் விடுதியில் வந்து பார்த்தபோது கதவு பூட்டப்பட்டு இருந்துள்ளது.
எஸ்.ஐ. வில்சன் கொலை: குற்றவாளிகள் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு
அதிக நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த மாணவர்கள் விடுதியின் காப்பாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விடுதியின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மாணவர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். மாணவர் தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்டு சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் நடந்த சம்பவம் குறித்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
'ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவில் படுகொலை நிகழ்த்துகின்றனர்' - பிரக்யா தாக்கூர்
கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இறந்த மாணவரின் தந்தை கமலாக்கார் ரெட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறார் என்று கூறப்படுகிறது.