தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஐஐடியில் அதிகரிக்கும் கரோனா - மேலும் 11 பேருக்கு தொற்று உறுதி

சென்னை ஐஐடியில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளது.

Chennai IIT Corona cases update
Chennai IIT Corona cases update

By

Published : Apr 29, 2022, 11:51 AM IST

Updated : Apr 29, 2022, 11:57 AM IST

சென்னை: சென்னை ஐஐடியில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து படித்து வருகின்றனர். விடுதியில் தங்கி படிக்கும் ஒரு மாணவர், ஏப். 19ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, ஏப். 20ஆம் தேதி 2 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டது.

அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ததில், ஏப். 21ஆம் தேதி மேலும் 9 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, ஐஐடியில் உள்ள மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்ந்து செய்யப்பட்ட பரிசோதனை முடிவில், ஏப். 22ஆம் தேதி 21 பேருக்கும், 23ஆம் தேதி 22 பேருக்கும், 24ஆம் தேதி 5 பேருக்கும், 25ஆம் தேதி 20 பேருக்கும், 26ஆம் தேதி 32 பேருக்கும், 27ஆம் தேதி 33 பேருக்கும், 28ஆம் தேதி மேலும் 26 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில், பரிசோதனை செய்தவர்களில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று இன்று (ஏப். 29) உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரிசோதனையும், சிகிச்சையும்: இதன்மூலம், ஐஐடியில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்ததால் அனைவரும் ஐஐடி வளாகத்திலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை ஐஐடியில் 7,490 பேரில், இதுவரை 7 ஆயிரத்து 104 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐஐடி வளாகத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 33 பேர் வேறு விடுதியில் 7 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 150 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவேரி மருத்துவமனையில் இணை நோய் உள்ள 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 4 இணை பேராசிரியர்கள் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஐடிக்குச் சென்று தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டு வருகிறார். மேலும், சென்னை மாநகராட்சி மருத்துவர்கள் குழு தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை கண்காணித்து வருகின்றனர்.

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

ஒமைக்ரான் BA2 வைரஸ்: மேலும், சென்னை மாநகராட்சி மருத்துவத்துறை அதிகாரி கூறும்போது, "சென்னை ஐஐடியில் 7,104 பேருக்கு நேற்று (ஏப். 28) வரை கரோனா பரிசோதனை செய்யப்பட்டுவிட்டது. பரிசோதனை செய்ததில் 183 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், விடுப்பட்ட சிலருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. ஐஐடியில் கண்டறியப்படும் கரோனா ஒமைக்ரான் BA2 வைரஸ் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: பிகாரில் ஒமைக்ரான் மாறுபாடான பிஏ. 12 தொற்று உறுதி

Last Updated : Apr 29, 2022, 11:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details