தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நெகிழித் தடையை மதிக்காத ஐஐடி மீது ஏன் நடவடிக்கை இல்லை: உயர் நீதிமன்றம் காட்டம்! - ஐஐடி

சென்னை: மான்கள் அதிகம் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தை நெகிழி இல்லாத பகுதியாக மாற்றுவது குறித்து அதன் இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

iit
iit

By

Published : Jan 21, 2020, 7:42 PM IST

சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜ்பவன், கிண்டி சிறுவர் பூங்கா, அண்ணா பல்கலைக்கழகம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற வளாகங்களில் உள்ள மான்களை வேறு இடத்திற்கு மாற்ற தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.

இதையடுத்து மான்களைப் பிடிக்கவும், வேறு இடத்திற்கு இடமாற்றவும் தடை விதிக்கக்கோரி விலங்கின ஆர்வலர் முரளிதரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், மான்களை இடமாற்றம் செய்யவும், மான்களை எப்படி பிடிக்க வேண்டும், இடமாற்றம் செய்யப்பட்ட மான்களின் நிலை குறித்து விதிகள் வகுப்பது தொடர்பாக வனத் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வனத் துறை சார்பில் தாக்கல்செய்யப்பட்ட அறிக்கையில், 2018 முதல் கிண்டி சிறுவர் பூங்காவுக்கு 129 மான்கள், களக்காடு புலிகள் காப்பகத்திற்கு 10 மான்கள், திருவண்ணாமலை வட்டத்தில் 41 மான்கள், வண்டலூர் வனவிலங்குகள் பூங்காவில் 36 மான்கள் என 216 மான்கள் பல்வேறு இடங்களில் விடப்பட்டுள்ளன.

சென்னை ஐஐடியில் மேயும் மான்கள்

95 விழுக்காடு மான்கள் வலைகளைப் பயன்படுத்தியும், ஐந்து விழுக்காடு மான்கள் மாவட்ட வனத் துறை அலுவலர் முன்னிலையில் மயக்க ஊசி செலுத்தியும் பிடிக்கப்படுகிறது. 2018இல் இடமாற்றம் செய்யும் பணியால் 10 மான்கள் உயிரிழந்ததாக மனுதாரர் கூறுவது உண்மையில்லை. இடமாற்றம் செய்யும் பணியால் இதுவரை எந்த மானும் உயிரிழக்கவில்லை.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள நெகிழித் தடை சட்டத்தை ஐஐடி வளாகத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்தாத நிர்வாகத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும், மான்கள் அதிகம் உள்ள ஐஐடி வளாகத்தில் நெகிழித் தடை உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து அதன் இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: ராஜீவ் கொலை வழக்கு: ஆறாவது முறையாக ஆஜராகும் முருகன்

ABOUT THE AUTHOR

...view details