தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எழில்மிகு மாமல்லபுரம் - மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு! - மாமல்லபுரம்

சென்னை: மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவைப்படும் நிதி குறித்து விவாதித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

case
case

By

Published : Jan 22, 2020, 4:55 PM IST

மாமல்லபுரத்தை அழகுபடுத்துவது தொடர்பாக நீதிபதி கிருபாகரன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பராமரிப்பு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களை ஒப்படைக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் வசூலித்த வகையில், 2018-19ஆம் ஆண்டுகளில், 8 கோடியே 14 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக இந்திய தொல்லியல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

யுனெஸ்கோவால் புராதன சின்னம் என அறிவிக்கப்பட்டுள்ள மாமல்லபுரத்தை அழகுபடுத்தும் பணிகளுக்கு மத்திய அரசுதான் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.

இதையடுத்து, மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவைப்படும் நிதி, மத்திய - மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு குறித்து, தமிழ்நாடு சுற்றுலாத் துறை செயலர், நிதித்துறை செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் மற்றும் தொல்லியல் துறை இயக்குநர் ஆகியோர் விவாதித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கு ஊதியப் பிரச்னை: அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details