தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்கலாம் - உயர் நீதிமன்றம் - highcourt

சென்னை: திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமாகாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

highcourt
highcourt

By

Published : Dec 7, 2019, 6:50 PM IST

கோயம்புத்தூரில் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்கியிருந்ததாலும் மதுபான பாட்டில்களை வைத்திருந்ததாலும் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் அவ்விடுதிக்கு சீல் வைத்தனர்.

இதனை எதிர்த்து அந்த விடுதி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, பத்திரிகைகள், சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு விடுதிக்கு சீல் வைத்தது இயற்கை நீதிக்கு எதிரானது எனக் கருத்துத் தெரிவித்தார்.

அப்போது, காவல் துறை தரப்பில் இந்த விடுதியில், திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்கியிருந்ததாலும் உரிமம் பெறாத மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டதாலும் சீல் வைக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டது.

காவல் துறையின் இவ்விளக்கத்தை ஏற்காத நீதிபதி, திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்கக் கூடாது எனச் சட்டம் இல்லாத நிலையில், அதில் என்ன தவறு இருக்கிறது எனக் கேள்வி எழுப்பினார். மேலும், ’லிவிங் டு கெதர்’ முறையில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை எப்படி குற்றமாகக் கருத முடியாதோ அதேபோல, இருவரும் ஒரே அறையில் தங்குவதும் குற்றமாகாது எனத் தெளிவுபடுத்தினார்.

சென்னை உயர் நீதிமன்றம்

அத்துடன், விடுதி அறையில் மதுபாட்டில்கள் கிடைத்ததால் மட்டுமே மது விற்பனை நடக்கிறது எனக் கூறிவிட முடியாது எனவும் தமிழ்நாடு மதுபான சட்டப்படி தனிநபர் ஒருவர்,

  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் - 4.5 லிட்டர்
  • வெளிநாட்டு மதுபானம் - 4.5 லிட்டர்
  • பீர் -7.8 லிட்டர்
  • ஒயின் - 9 லிட்டர்

என வைத்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, விடுதியில் மதுபான பாட்டில்கள் வைத்திருந்தது குற்றமாகாது எனவும் விளக்கினார். அதுமட்டுமின்றி, விடுதிக்கு சீல் வைத்தபோது, உரிய சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படாததால், அந்தச் சீலை உடனே அகற்ற கோவை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பெண்களுக்கென்று மதுரையில் மதுக்கடை...! - கள் இயக்கம் விளாசல்

ABOUT THE AUTHOR

...view details