சென்னை குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிவரக்கூடிய வெங்கடேசன் (47). இவரது மனைவி திரிவேணி (45), அகர்வால் கண் மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மருத்துவர் திரிவேணி கணவனைப் பிரிந்து குழந்தைகளோடு தந்தை வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மருத்துவர் வெங்கடேசன் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டதாக குமரன் நகர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அரசு மருத்துவர் விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை: மனைவி பிரிந்துசென்றதால் தவறான முடிவு! - Royapettah Doctor Suicide
சென்னை: ராயப்பேட்டையில் பணிபுரியும் அரசு மருத்துவமனை மருத்துவர், மனைவி பிரிந்துசென்ற வேதனை தாங்காமல் வீட்டில் விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
Doctor