ஆந்திராவிலிருந்து ஹவுரா விரைவு ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நுண்ணறிவுக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.
சென்னையில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது - போதைப்பொருள் தடுப்பு பிரிவு
சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம் அருகே பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை கடத்திவந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அப்போது சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஒரு அலுவலகம் அருகே கஞ்சாவை கடத்திவந்த வினோத் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பெரம்பூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை கடற்கரை ரயில்நிலையம் பிரதான சாலை அருகே கைது செய்து அவரிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 10 லட்சம் ரூபாயாகும். இருவர் மீதும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.