தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இட்லிய வச்சு தேர்தல் விழிப்புணர்வு...!

சென்னை: தென் இந்தியாவின் பாரம்பரிய உணவான இட்லியின் மூலமாக நாடாளுமன்றத் தேர்தல் குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இட்லி

By

Published : Mar 29, 2019, 12:00 PM IST

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு பகுதிகளிலும் பல விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த உணவு சங்கம் ஒன்று புதிய முயற்சியை மேற்கொண்டு வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. அதன்படி வாக்களர்களுக்கு உள்ள உரிமை பற்றியும், தேர்தலில் நூறு விழுக்காடு வாக்குகள் அளிக்க வேண்டியது பற்றியும்அவர்கள் பல விதமான இட்லிகளை உருவாக்கியிருந்தனர்.

உலக இட்லி தினம் நாளை (மார்ச் 30) தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவான இட்லியை வைத்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தியது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து பிரபல இட்லி தயாரிப்பாளரான இட்லி இனியவன் கூறுகையில், நாங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வகையான இட்லிகளை தயார்செய்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.

மேலும், இந்த இட்லியின் மூலமாக வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை விற்கக் கூடாது என்பது பற்றியும் வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details