சென்னை:டெல்லியில் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்ப வேண்டிய 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன.
டெல்லியில் பனிமூட்டம் - விமானத்திற்காக காத்திருந்த முதலமைச்சர்! - விமான நிலைய செய்திகள்
டெல்லியில் பனிமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் பத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகக் கிளம்பியதால், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
டெல்லியில் இன்று (பிப். 11) காலை கடும் பனிமூட்டம் காரணமாக, டெல்லியிலிருந்து சென்னை வரவேண்டிய 4 விமானங்கள் 3 மணிநேரம் தாமதமாக வந்தடைந்தது. காலை 10 மணி, காலை 10.45 மணி,11.05 மணி, பகல் 12.15 மணி, பகல் 12.45 மணி ஆகிய 5 விமானங்கள் பிற்பகல் 1.30 மணிக்கு மேல்தான் சென்னை வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விமானங்கள் டெல்லியிலிருந்து சென்னை வந்துவிட்டு, மீண்டும் சென்னையிலிருந்து டெல்லி, கொல்கத்தா, கோவா, கோயம்புத்தூர் ஆகிய இடங்களுக்குப் புறப்பட்டுச் செல்லும். அந்த 5 விமானங்களும் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாகத் தாமதமாகப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.