தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 63 ஆயிரம் காவல் துறையினர்!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் 60 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

security
security

By

Published : Dec 26, 2019, 1:06 PM IST

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்க இருக்கிறது.

ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்டப் பதவிகளுக்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் நேரத்தில் எந்த வித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க, காவல்துறை சார்பில், சுமார் 48,579 காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் காவல்துறை நண்பன் திட்டத்தில் பணியாற்றும் 14,500 பேர் என மொத்தமாக 63 ஆயிரத்து 79 பேர் இந்த உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை இந்தப் பாதுகாப்புத் தொடரும் எனவும் காவல்துறை இயக்குநர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மும்முரமாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் பணிகள்!

ABOUT THE AUTHOR

...view details