சென்னை மாநகரப் பகுதிகளில், கால்நடைகள் சுகாதாரப் பிரிவு சார்பாக தெரு நாய்களுக்கான இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய் கடித் தடுப்புபூசிகள் செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, இந்திய விலங்குகள் நல வாரியம் சில வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு இடையே புரிதலை உருவாக்கவும், தெரு நாய்களின் வாழ்வியல் முறையை மேம்படுத்தவும் தன்னார்வலர்களின் ஒத்துழைப்பை நாட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மேலும், தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நாய்களை அடையாளம் காணவும், இனக் கட்டுப்பாட்டு சிகிச்சை செய்திராத நாய்களைக் கண்டிடவும், தெரு நாய்களைத் தத்தெடுக்கும் திட்டத்தை ஊக்குவிப்பதற்கும், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளப்படுவர்.
எனவே, மாநகராட்சியால் எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்கி தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தங்களது விபரங்களை மாநகராட்சியில் பதிவு செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: களைகட்டும் கோவை விழா - கலக்க காத்திருக்கும் இயற்கை விசைப்படகுகள்!