தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அத்தியாவசிய நிறுவனங்களுக்கான அனுமதி - இணையத்தில் விண்ணப்பிக்க மாநகராட்சி அறிவுறுத்தல்! - நிறுவனங்கள்

சென்னை: அத்தியாவசிய தேவைகள் சார்ந்த நிறுவனங்கள் இயங்குவதற்கான அனுமதி சீட்டினைப் பெற சென்னை மாநகராட்சி இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

corporation
corporation

By

Published : Apr 18, 2020, 3:00 PM IST

Updated : Apr 18, 2020, 8:02 PM IST

கரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசியத் தேவைக்கான நிறுவனங்களை தவிர பிற நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

அதில், ”அத்தியாவசிய நிறுவனங்கள் செயல்பட அவற்றின் பணியாளர்கள் மற்றும் வாகன போக்குவரத்திற்கான தமிழ்நாடு அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அரசாணையின்படி அந்நிறுவனங்களுக்கு பெருநகர் சென்னை மாநகராட்சியின் சார்பில் அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுவருகின்றன.

தற்போது பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் நலன் கருதி அனுமதி அட்டை பெற சென்னை மாநகராட்சியின் இணையதளமான http://covid19.chennaicorporation.gov.in/c19/ வழியே சரக்கு மற்றும் சேவை வரி பதிவு சான்றிதழ் நகல், பணியாளர் அடையாள அட்டை நகல், வாகனப் பதிவு சான்றிதழ் நகல் மற்றும் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் ஆகிய ஆவணங்களுடன் காலை 8 மணி முதல் 11 மணிவரை மற்றும் பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

எனவே, நிறுவனங்கள் இனி அனுமதிச் சீட்டினைப் பெற சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வருவதை தவிர்த்து இணையதளத்தில் விண்ணப்பத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதியுள்ள விண்ணப்பங்களுக்கு இணையதளத்தின் மூலமாக அனுமதிச் சீட்டு வழங்கப்படும் “ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோயம்பேட்டில் காலை 7.30 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்களுக்குத் தடை!

Last Updated : Apr 18, 2020, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details