தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சாலை விதிகளை மீறுவோரை கவனிக்கிறார் பிக்பாஸ்! - ஹுண்டாய்

சென்னை: சிக்னலை மதிக்காமல் செல்வோரின் வாகன எண்களை தானாகவே பதிவு செய்து அபராத ரசீது தரும் அதிநவீன சிசிடிவி கேமரா இயக்கத்தை சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வாநாதன் தொடங்கிவைத்தார்.

cctv camera function

By

Published : Jun 25, 2019, 8:26 AM IST

சென்னையில் அண்ணாநகரை உள்ளடக்கிய ஐந்து சந்திப்புகளில் 61 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வாநாதன் நேற்று தொடங்கிவைத்தார்.

அதன் பின் பேசிய ஏ.கே. விஸ்வநாதன், "இந்தக் கேமராக்கள் சமிக்ஞையை (சிக்னல்) மதிக்காமல் செல்வோர், நிறுத்தக் கோட்டுக்குள் வண்டியை நிறுத்தாதவர்கள் போன்றவர்களின் வாகன எண்களை தானாகப் பதிவு (ANPR - Automatic Number Plate Regonition) செய்து அபராத ரசீது தரும் தொழில்நுட்பம் கொண்டது. இதனை சேவை மனப்பான்மையோடு ஹுண்டாய் மோட்டார் நிறுவனம் இரண்டரை கோடி ரூபாய் செலவில் மக்களுக்கு வழங்கியுள்ளது.

சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் பெற்றுதரும் அதிநவீன சிசிடிவி கேமராக்கள்

அதிநவீன தொழில்நுட்பத்தால் தானாகவே அபராதம் போட முடிகிறது என்பது முக்கியமல்ல. இதனால் மக்கள் போக்குவரத்து விதிகளை கடுமையாக மதிக்க வேண்டும் என்பதே முக்கியம். எனவே போக்குவரத்து காவலர் இல்லையென்றாலும் மக்கள் சமுதாயக் கடமையாக நினைத்து போக்குவரத்து விதிகளை தாமாகவே பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details