சென்னை காசிமேடு ஜிஎம் பேட்டை தெருவில் வசித்து வரும் விரலால்யாதோ மகன் சந்தோஷ் (15). இவர் நண்பர்களோடு காசிமேடு கடலில் குளிக்கச் சென்றார்.
அப்போது பெரிய ராட்சத அலையில் மாட்டிக்கொண்ட சிறுவன் சந்தோஷை பார்த்த நண்பர்கள் சத்தமிட்டனர். இதனையடுத்து, அருகில் இருந்த மீனவர்கள் அந்த சிறுவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அலையின் வேகம் அதிகமாக இருந்ததால், அந்த சிறுவனை மீட்க முடியாமல் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டான்.