சென்னை: சென்னையில் கரோனா தொற்று பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி ஒமைக்ரான் தொற்றும் பல்வேறு இடங்களில் அதிகரித்து வருகிறது.
எனவே இதனைக் கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் பல்வேறு இடங்களில் கிளஸ்டர் (Cluster) உருவாகியுள்ளது.
இந்நிலையில், பூந்தமல்லி சாலை எழும்பூர் தாசப்பிரகாஷ் பகுதியில் அமைந்துள்ள ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்த ஏழு நபர்களுக்கு லேசான அறிகுறியுடன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர்கள் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்ததில், பதிமூன்று நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் மொத்தம் 20 நபர்களுக்கும் மேல் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க:மு.க.தமிழரசுவின் மாமியார் ஜெயலட்சுமி காலமானார்: முதலமைச்சர் குடும்பத்துடன் அஞ்சலி