வெப்பச்சலனம் காரணமாக இன்று(மே.23) கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. பிற மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
24.05.2021 : கன்னியாகுமரி, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
25.05.2021: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
26.05.2021, 27.05.2021: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்):
நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 15, குழித்துறை (கன்னியாகுமரி) 11, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 8 , மைலாடி (கன்னியாகுமரி) 7, கோபிசெட்டிபாளையம் (ஈரோடு) 6, சங்கரிதுர்க் (சேலம்), அவலாஞ்சி (நீலகிரி) தலா 5, பென்னாகரம் (தர்மபுரி), பாபநாசம் (திருநெல்வேலி) தலா 4, கொடைக்கானல் படகுத்துறை (திண்டுக்கல்) 3.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
23.05.2021: தமிழ்நாடு கடலோரப் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 40 - 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
24.05.2021: தமிழ்நாடு கடலோரப் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 45 - 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வடக்கு வங்கக் கடல், ஒடிஷா, மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
25.05.2021: தமிழ்நாடு கடலோரப் பகுதி, ஆந்திர கடலோரப் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 - 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வடக்கு வங்கக் கடல், ஒடிஷா, மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
26.05.2021: தமிழ்நாடு, ஆந்திர கடலோரப் பகுதி, மன்னார்வளைகுடா தெற்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு வங்கக் கடல், ஒடிஷா மற்றும் மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேலும் இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : முழு ஊரடங்கு உத்தரவு: சந்தைகளில் அலைமோதிய பொதுமக்கள்!