சென்னை: தமிழ்நாட்டில் வெள்ள சேத பாதிப்புகள் குறித்து முழுமையான ஆய்வுக்கு பிறகு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என மத்திய குழு தலைவர் ராஜீவ் சர்மா (Rajiv Sharma) தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாடு வந்துள்ளனர். இவர்கள் நாளை (நவ.22) காஞ்சிபுரம் செங்கல்பட்டு, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) டெல்டா மாவட்டங்கள், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
Rajiv Sharma : தமிழ்நாட்டில் வெள்ளப் பாதிப்பு குறித்து மத்திய குழு இரு நாள்கள் ஆய்வு - Central team
தமிழ்நாட்டில் வெள்ள சேத பாதிப்புகள் குறித்து முழுமையான ஆய்வுக்கு பிறகு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என மத்திய குழு தலைவர் ராஜீவ் சர்மா தெரிவித்தார்.
Rajiv Sharma
அதன் பின்னர் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் இணை ஆணையர்கள் தலைமை பொறியாளர்கள் உள்ளிட்டோருடன் சென்னையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சுமார் 1.30 மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா, “இன்று முதல் தங்களுடைய ஆய்வு பணியை தொடங்கியுள்ளோம். தலைமை செயலாளர் உள்பட மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.
அடுத்த இரண்டு நாள்கள் ஆய்வு செய்து முழுமையாக அறிக்கையை சமர்ப்பிப்போம். ஆய்வறிக்கையை எப்போது சமர்ப்பிப்போம் என்பது தற்போது என்னால் கூற இயலாது” என்று தெரிவித்தார்.
Last Updated : Nov 22, 2021, 11:03 PM IST