சென்னை: ஜி.எஸ்.டி உயரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது - ஜி.எஸ்.டி உயர்ந்தால் விலைவாசி உயரும்- மாநிலங்களுக்கான பங்களிப்பு இந்த ஆண்டு நிறுத்தபட உள்ளது குறித்து பா.ம.க சட்டப்பேரவை குழுத் தலைவர் ஜி.கே, மணி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு கொண்டு வந்தார்.
இதற்குப் பதிலளித்து பேசிய நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், " ஒரே நாடு ஒரே வரியால் நாட்டில் எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை என்றும், ஜி.எஸ்.டியால் எல்லா தொழில்களிலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி இழப்பினை 5 ஆண்டுடன் முடிக்காமல் நீடிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் என்றும், ஜூன் 30ஆம் தேதியுடன் ஜி.எஸ்.டி இழப்பு நிற்க போகிறது, இதன் மூலம் ஒவ்வொரு மாநிலத்திறக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். ஏனெனில் மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகளுக்கு வருமானம் குறைவாகத்தான் உள்ளது என்றும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு நாளை(20-4-2022) கடிதம் எழுத உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஜி.எஸ்.டி வந்த பிறகு, Effective Tax Rate உற்பத்தியில் 11.4 % ஆக சரிந்து விட்டது என்றும், இதனால் மத்திய அரசுக்கு மட்டுமல்லாமல், எல்லா மாநில அரசுகளுக்கும் நஷ்டம் என்றும் தெரிவித்தார். ஜி.எஸ்.டி வந்த பிறகு விற்பனை வரி வளரவில்லை என்று குறிப்பிட்ட அவர், ஜி.எஸ்.டி இழப்பீட்டை 5 ஆண்டுடன் முடிக்காமல் நீடிக்க வேண்டும் என்பது அனைத்து மாநிலங்களின் கோரிக்கை" என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டான்செட் 2022 - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு