காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் ஒலிமுகமதுபேட்டை பகுதியில் உள்ள ராமானுஜர் தெருவில் வசித்து வருபவர் சாகுல் ஹமீது. இவர் கார்களை வைத்து ட்ரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி வருகிறார். சாகுல் ஹமீத் தனது காரில் சென்னைக்கு வேலைக்காக சென்று நேற்று முன்தினம் (ஆக. 12) இரவு வீடு திரும்பியுள்ளார். வழக்கம்போல் வீட்டின் முன்பகுதியில் தனது காரை நிறுத்தியுள்ளார்.
திடீரென்று அதிகாலை 3 மணியளவில் அக்கம் பக்கத்தினர் சாகுல் ஹமீதை தொடர்புகொண்டு, தங்களது கார் கண்ணாடி முற்றிலுமாக உடைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர். அவர் உடனடியாக எழுந்து வந்து பார்த்தபோது, அவரின் கார் கண்ணாடி கற்களை கொண்டு முற்றிலுமாக உடைக்கப்பட்டிருந்தது.
போதையில் இளைஞர்கள் கார் கண்ணாடிகளை உடைக்கும் சிசிடிவி காட்சி இதனையடுத்து, சாகுல் ஹமீத் தனது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை ஆராய்ந்துள்ளார். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் சட்டைல்யில்லாமல் வந்த இரண்டு இளைஞர்கள் பெரிய கற்களால், அவரின் கார் கண்ணாடியை உடைத்தது, அதில் பதிவாகி இருந்தது.
பின்னர், இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிசிடிவி காட்சியை அடிப்படையாக கொண்டு அந்த இளைஞர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:அசிங்க அரசியலை தவிர பாஜகவுக்கு வேறு எதுவும் தெரியாது… துரைமுருகன் கண்டனம்