சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்களை தடுக்க பொது மக்களின் பாதுகாப்புக் கருதி 10 சிசிடிவி கேமரா மற்றும் இலவச தலைக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தனியார் ஓட்டல் உரிமையாளர் வெங்கடேஷ் என்பவர், பம்மல் பகுதியில் 10 சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளார். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு தலைக்கவசம் இலவசமாக வழங்கினார்.
சிசிடிவி கேமரா, இலவச தலைக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி இந்நிகழ்ச்சியில் பம்மல் சங்கர் நகர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் முகமது பர்க்கதுல்லா மற்றும் குற்றப் பிரிவு ஆய்வாளர் பசுபதி ஆகியோர் கலந்துகொண்டு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை தொடக்கி வைத்தனர்.
இதுகுறித்து காவல் ஆய்வாளர்கள் பேசுகையில், புறநகர் பகுதியில் நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்கள், சிசிடிவி கேமராக்கள் மூலம் குறைந்துள்ளது. இதன்மூலம் குற்றவாளியை விரைந்து பிடிக்க முடியும். எனவே பொது மக்கள் உதவ முன்வர வேண்டும், என்றனர்.
இதையும் படிங்க: பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்: திருமண நாளில் முன்னாள் ரூட் தல கைது!