தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சாதிய வன்மம் என புகார் - பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவன இயக்குநர் மீது வழக்கு - seva bharathi

தரமணியில் உள்ள தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குனர், தன்னுடன் பணிபுரியும் மூத்த உதவி இயக்குனரிடம் சாதிய வன்மத்துடன் நடந்து கொண்டதாக எழுந்த புகாரில், அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

discrimination
discrimination

By

Published : May 25, 2022, 3:13 PM IST

Updated : May 25, 2022, 3:20 PM IST

சென்னை: மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும், தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (NIFT)சென்னை தரமணியில் உள்ளது. இதன் இயக்குனராக இருக்கும் சுவேதா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது), இதே நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த உதவி இயக்குனர் ரவி ( பெயர்மாற்றப்பட்டுள்ளது) மீது சாதிய வன்மத்துடன் நடந்து வருவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிர்வாகப் பிரிவு மூத்த உதவி இயக்குனரான ரவியின் அலுவலகம், கல்வி நிறுவனத்தின் பிரதான கட்டிடத்தில் இயங்கி வந்துள்ளது. இந்த அலுவலகத்தை மாணவர் விடுதியில் உள்ள அறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். ரவி பயன்படுத்தி வந்த அலுவலகத்தை ஆராய்ச்சி மாணவரை பயன்படுத்தும்படி கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கைகளை எதிர்த்து மூத்த உதவி இயக்குனர் ரவி டெல்லியிலுள்ள உயர் அதிகாரிகளுக்கு புகார் கடிதம் எழுதினார். இதையடுத்து டெல்லி அதிகாரிகள் விசாரணை செய்து, மீண்டும் பிரதான கட்டிடத்திலேயே அலுவலகம் ஒதுக்க உத்தரவிட்டனர். ஆனால் சுவேதா அதை செயல்படுத்தாமல் மூத்த உதவி இயக்குனர் ரவியை அதே விடுதி அலுவலகத்தில் இயங்க வற்புறுத்தியுள்ளார். மேலும் சுவேதா உள்ளிட்ட இயக்குனர்கள் கார் நிறுத்தும் இடத்தில், தனது காரை நிறுத்த அனுமதி மறுக்கப்படுவதாகவும் ரவி கூறியுள்ளார்.

கல்வி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உத்தரவை செயல்படுத்தாமல் தொடர்ந்து சாதிய வன்மத்துடன் இயங்கி வருவதாக சுவேதா மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி, தரமணி உதவி ஆணையரிடம் ரவி புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது கடந்த 8ஆம் தேதி தரமணி போலீசார் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

சுவேதாவின் கணவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளை அமைப்பான சேவாபாரதி என்கிற அமைப்பின் தமிழ்நாடு மாநில செயலாளராக இருந்து வருகிறார். இதனிடையே ரவி மீது சுவேதாவும் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் தரமணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

Last Updated : May 25, 2022, 3:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details