Cash and cigarettes packets theft: சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் காமராஜபுரம் தென்றல் நகர்ப் பகுதியில் சபரி முத்து என்பவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்றிரவு(டிச.27) டீக்கடையை மூடி விட்டு வீட்டிற்குச் சென்ற சவரிமுத்து இன்று(டிச.28) காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கடையிலிருந்த விலை உயர்ந்த சிகரெட் பாக்கெட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து சவரிமுத்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:Annapoorani arasu amma: அன்னபூரணியை கைது செய்யக்கோரி இந்து அமைப்புகள் புகார்