தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து - tamilnadu government

கடந்த அதிமுக ஆட்சியில் அரசுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களின் மீது போடப்பட்ட 5,570 வழக்குகளை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வழக்குகள் ரத்து
வழக்குகள் ரத்து

By

Published : Sep 14, 2021, 3:58 PM IST

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களின் மீது போடப்பட்ட 5,570 வழக்குகளை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பத்திரிகையாளர்கள் மீதான அவதூறு வழக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு

மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராடியவர்கள் மீது பதியப்பட்ட வழக்கு, குடியுரிமை திருத்த சட்டம், எட்டு வழிச்சாலை, நியூட்ரினோ, ஸ்டர்லைட், ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்களின் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாகவும், அவர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்படுவதாக முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.

முதலமைச்சர்

அதை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்களின் மீது போடப்பட்ட வழக்குகளும் திரும்ப பெறப்படும் என அறிவித்துள்ள நிலையில், அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

இதையும் படிங்க: ‘வேளாண் சட்டப் போராட்ட வழக்குகள் ரத்து’ - முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details