தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'சுற்றுச்சூழலை பாதுகாக்க போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்': முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்ற எம்.எல்.ஏக்கள் - Chennai news

சென்னை: 'சுற்றுச்சூழலை பாதுகாக்க போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் எனக்கூறிய முதலமைச்சர் அறிவிப்பு வரவேற்கக் கூடியது' என சட்டப்பேரவை உறுப்பினர்கள் வேல்முருகன் மற்றும் ஜவாஹிருல்லா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்
சுற்றுச்சூழலை பாதுகாக்க போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்

By

Published : Jun 24, 2021, 3:45 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் முடிந்தபிறகு சட்டப்பேரவை உறுப்பினர்கள் வேல்முருகன் மற்றும் ஜவாஹிருல்லா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், "ஆளுநரின் உரை சிறப்பாக இருந்தது. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இருந்தது.

சமூக நீதி காக்கும் அரசு

கூடங்குளம் அணு உலை, குடியுரிமை திருத்தச்சட்டம், மீத்தேன், எட்டுவழிச்சாலை திட்டம், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்படையும் திட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக முதலமைச்சர் அறிவிப்பு வரவேற்கக் கூடியது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த அரசு சமூக நீதி காக்கும் அரசாக உள்ளது" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்'

ABOUT THE AUTHOR

...view details