தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிபிஐ மாநில துணை செயலாளரை கத்தியால் தாக்க முயன்ற வழக்கு: ஐந்து பேரிடம் காவல்துறையினர் விசாரணை - CPI state general secretary

இந்திய கம்ப்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளரை தாக்கி கத்தியால் குத்த முயன்ற வழக்கில் ஐந்து பேரிடம் காவல்துறையினர் விசாரணை.

சிபிஐ மாநில பொதுச்செயலாளரை கத்தியால் தாக்க முயன்ற வழக்கு: ஐந்து பேரிடம் காவல்துறையினர் விசாரணை
சிபிஐ மாநில பொதுச்செயலாளரை கத்தியால் தாக்க முயன்ற வழக்கு: ஐந்து பேரிடம் காவல்துறையினர் விசாரணை

By

Published : Sep 6, 2022, 7:05 AM IST

சென்னை: இந்திய கம்ப்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் தாக்க முயன்ற வழக்கில் ஐந்து பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எம்.கே.பி நகர் மெயின்ரோடு சந்திப்பில் நேற்று இரவு அடையாளம் தெரியாத 3 நபர்கள் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த சிபி.ஐ மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் தகராறில் ஈடுபட்ட அந்த நபர்களை தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் வீரபாண்டியனை தாக்கி கையில் வைத்திருந்த கத்தியால் குத்த முயன்ற போது பொதுமக்கள் சத்தமிட்டதால் அனைவரும் தப்பிச்சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்டி. சேகர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த வீரபாண்டியனிடம் நலம் விசாரித்து சென்றார்.

பின்னர் சிபி.ஐ மாநில குழு உறுப்பினர் உதயகுமார் அளித்த புகாரின் பேரில் எம்.கே.பி நகர் காவல்துறையினர் கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த சூர்யா அவரது கூட்டாளிகளுடன் குடிபோதையில் தாக்கியதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வியாசர்பாடியை சேர்ந்த சிவபிரகாஷ், அரவிந்த் , சக்திவேல் , சூர்யபிரகாஷ் , அஜித் ஆகியோரை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தாம்பரம் அருகே 8 சவரன் நகை மற்றும் ரூ17,000 கொள்ளை..கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு..

ABOUT THE AUTHOR

...view details