சென்னை நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த சத்ய நாராயணன் (50) என்பவர் ஷிப்பிங்கில் தொழிலதிபராக இருந்துவருகிறார். இவர் நேற்றிரவு, நீலாங்கரையில்லிருந்து தனது மகன் ஹர்ஷவர்தனுடன் தி.நகரில் உள்ள தனது தந்தை பாபு வீட்டிற்கு ஸ்கோடா காரில் வந்துள்ளார்.
மதுபோதையில் உறங்கி கொண்டிருந்த நபர் மீது கார் ஏறி விபத்து! - குடிபோதையில் வீட்டு வாசலில் உறங்கி கொண்டிருந்த நபர் மீது கார் மோதியது
சென்னை: குடிபோதையில் வீட்டு வாசலில் உறங்கி கொண்டிருந்த நபர் மீது கார் ஏறியதால் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது அவரது வீட்டு வாசலில் காரை நிறுத்த செல்லும் வழியில் குடிபோதையில் உறங்கி கொண்டிருந்த நபரை கவனிக்காமல் அவர் மீது காரை ஏற்றியுள்ளார். பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபரை காரில் ஏற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது அந்நபரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாண்டி பஜார் போக்குவரத்து காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார் என்பது பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.