‘கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டதாக அளித்த புகாரின் பேரில் சுரேந்தர், செந்தில்வாசன், குகன், சோமசுந்தரம் உள்ளிட்ட 4 பேரை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். மேலும் சுரேந்தர், செந்தில்வாசனை குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.
குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - ‘கறுப்பர் கூட்டம்’ சுரேந்தர் மனைவி கோரிக்கை
சென்னை: ‘கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனலைச் சேர்ந்த சுரேந்தர் மீது விதிக்கப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி, உள்துறை செயலரிடம் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
இந்த நிலையில், சுரேந்தர் மீது விதிக்கப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி கிருத்திகா தமிழ்நாடு உள்துறை செயலர் மற்றும் அறிவுரை கழகத்திற்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில், சுரேந்தர் மீது பொய்யான வழக்கு பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். குறிப்பாக சுரேந்தர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளும் அளவிற்கு குற்றம் செய்யவில்லை. குற்றவாளி இல்லை என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளது. மேலும் கந்த சஷ்டி குறித்து பேசி வீடியோ வெளியிட்டது ஜனவரி மாதம். ஆனால் தற்போது வெளியிட்டதாக கூறி பொய்யான வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். இதுமட்டுமில்லாமல் இந்த பொய்யான வழக்கை தீர விசாரிக்காமல் சட்டவிரோதமாக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய கோரிக்கை வைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.