தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்... - Consultation session of TN Legislative Assembly

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 26, 2022, 12:45 PM IST

சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. திமுக பொறுப்பேற்ற பிறகு எட்டாவது முறையாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்டோபர் மாதம் நடைபெறும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கூட்டத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கை, ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த விசாரணை அறிக்கை, புதிய தொழில் முதலீடுகள், வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து துறை அமைச்சர்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம்
இதைத்தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும், சமீபத்தில் கோவை, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் தொடர்பாகவும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசை தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளதால் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொள்ளவில்லை.

இதையும் படிங்க: சென்னையில் அரசு அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என கூறி மோசடி...

ABOUT THE AUTHOR

...view details