தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொழிலுக்கு போட்டியாக இருந்தவர் மீது கூலிப்படையை ஏவிய நபர் கைது

சென்னை: காசிமேட்டில் தொழில் போட்டியின் காரணமாக கூலிப்படையை வைத்து தாக்கிய சவுண்ட் சர்வீஸ் கடை உரிமையாளர் உட்பட நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.

தொழிலுக்கு போட்டியாக இருந்தவர் மீது கூலிப்படையை ஏவிய நபர்!

By

Published : Jul 30, 2019, 7:05 AM IST

சென்னை காசிமேட்டில் பல ஆண்டுகளாக சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருபவர் பிரகாஷ்(30). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவருக்கும் தொழில் ரீதியாக கடந்த ஆறு மாதமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால், பிரகாஷ்சை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று திட்டம் தீட்டிய சேகர், ஐந்து பேர் கொண்ட கூலிப்படையை வைத்து அவரை அடித்து உதைக்க திட்டம் தீட்டியுள்ளார்.

இந்நிலையில், வீட்டில் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் ஸ்பீக்கர் பாக்ஸ், சீரியல் பல்ப் போடவேண்டும் எனக்கூறி நேற்று மதியம் காசிமேட்டில் இருக்கும் சேகர் கடைக்கு, ஐந்துபேருடன் பிரகாஷ் சென்றுள்ளார்.

இதை நம்பிய பிரகாஷ், அவர்களுடன் ஆட்டோவில் ஏறிச் சென்றுள்ளார். ஆட்டோ தண்டையார்பேட்டையில் உள்ள வைத்தியநாத சாலையில் நிறுத்தப்பட்டு, உடனே பிரகாஷை அந்த ஐந்துபேரும் தாக்கியுள்ளனர். இதில் வலி தாங்காமல் பிரகாஷ் கூச்சலிட்டுள்ளார்

அதிர்ஷ்டவசமாக அருகே ரோந்து காவலர் ஒருவர் வரும்போது ஐந்துபேரும் அங்கிருந்து ஓடியுள்ளனர்.

இதையடுத்து, அருகில் உள்ள காவல் நிலையத்தில் பிரகாஷ் புகார் கொடுத்துள்ளார். வழக்குப் பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர் தப்பியோடிய ஐந்து பேரையும் கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details