பாரத் ஃபைபர் சேவை இணைப்புத் தருவதாக ஏமாற்றும் போலி இணையதளங்கள்
சென்னை: ஃபைபர் இணைப்பு வழங்கும் வர்த்தகத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதாகச் சொல்லி, வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் போலி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகத் தங்களுக்குப் புகார்கள் வந்துள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் வீடுகளுக்கு ஃபைபர் (கண்ணாடியிழை) இணைப்புகளை (FTTH) வழங்கிவருகிறது. இது மிகவும் பிரபலம் அடைந்துள்ளதால், இந்த ஃபைபர் இணைப்பு வழங்கும் வர்த்தகத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதாகச் சொல்லி, வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் போலி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகத் தங்களுக்குப் புகார்கள் வந்துள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் போலி இணையதளங்கள், பாரத் ஃபைபர் சேவை இணைப்புகளை நேரடியாக வழங்குவதாகக் கூறி, நெட் பேங்கிங், யுபிஐ போன்ற ஆன்லைன் வசதிகள் மூலமாக முன்பணம் செலுத்தும்படியும் வாடிக்கையாளர்களிடம் கூறுவதாகவும், புதிய இணைப்புக்கு ஆன்லைன் மூலம் பதிவுசெய்ய பணம் எதுவும் கேட்கவில்லை என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது போன்ற போலி நிறுவனங்கள் கூறுவதைக் கேட்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும் அங்கீகாரமற்ற யூ-ட்யூப் காணொலிகளை நம்ப வேண்டாம் எனவும் பிஎஸ்எல்எல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிறுவனம் தொடர்பான விவரங்களை அறிய பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டும் அல்லது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் பிஎஸ்என்எல் செல்போன், லேண்ட்லைனிலிருந்து 1500 என்ற எண்ணையும், பிற நிறுவனங்களின் செல்போன், லேண்ட்லைனிலிருந்து 1800-345-1500 என்ற எண்களைத் தொடர்புகொள்ளும்படி பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.