சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஏழாவது நாளாக வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்துகொண்டு போராட்டத்தில் அமர்ந்திருந்த இஸ்லாமிய பெண்களிடம் கை குலுக்கி தனது ஆதரவை தெரிவித்தார்.
பின்னர் பேசிய அவர், "நாடு முழுவதும் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டமைக்கு நன்றிகள். மக்களின் போராட்டத்தை மோடி புரிந்து கொள்ள வேண்டும். இப்போராட்டம் வெற்றிபெறும். இப்போராட்டத்தில் பொட்டு வைத்துள்ள பெண்கள் மற்றும் புர்க்கா அணிந்த பெண்கள் இணைந்த சக்தியினை உங்களால் பிரிக்க முடியாது" என்று தெரிவித்தார்.