சென்னை அடுத்த ஒரகடம், காந்தி நகர், கோயில் தெருவை சேர்ந்தவர் மகாதேவன் (25). இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாணவியை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால், மகாதேவனை சந்திப்பதை மாணவி தவிர்த்து வந்துள்ளார்.
காதலியின் புகைப்படத்தை அவதூறாக வெளியிட்ட காதலன் போக்சோவில் கைது - Facebook post
சென்னை: முகநூலில் போலி கணக்கு தொடங்கி காதலியின் புகைப்படத்தை அவதூறாக வெளியிட்ட காதலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சில நேரங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு வரச்சொல்லிவிட்டு பல மணி நேரம் மகாதேவன் காத்திருந்தபோதும் மாணவி வராமல் தவிர்த்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த மகாதேவன், காதலியை பழிவாங்க முகநூலில் போலி கணக்கு தொடங்கி அதில் மாணவியின் புகைப்படத்துடன் செல்போன் நம்பரை குறிப்பிட்டு அவதூறாக பதிவு செய்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர், மாணவியின் பெற்றோர் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்படி, காவல் ஆய்வாளர் ரமணி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மகாதேவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.