சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகின்றார்.
இந்நிலையில், இவரது வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இன்று (நவ. 10) மதியம் 2 மணியளவில் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து, நீலாங்கரை காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
பொய் மிரட்டல்
இதனையடுத்து, நீலாங்கரை காவலர்கள், வெடிகுண்டு வல்லுநர்கள், மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் பொய்யான தகவல் எனத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து நீலாங்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்ஃபோன் எண்ணை வைத்து மிரட்டல் விடுத்த நபர் யார், எதற்காக மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகர் சூர்யா மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்