சுதந்திர தின விழா 3 நாட்களில் நடைபெறுவதையொட்டி இந்தியா உட்பட 3 நாடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆப்கான் நாட்டு பயங்கரவாதியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதையொட்டி, தீவிரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை இங்கிலாந்து நாட்டில் மருத்துவராகப் பணிபுரிவதற்கான தகுதித்தேர்வு முகாம் இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்றது.
குறிப்பாக இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை,கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வருகிறது.
நெருங்கும் சுதந்திர தினம்: சென்னையில் 6 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! - 3 நாடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆப்கான் நாட்டு பயங்கரவாதி
17:28 August 12
சென்னையில் மட்டும் தியாகராய நகர், நுங்கம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட ஆறு இடங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தேர்வு முகாம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று காலை தேர்வை நடத்தி வரும் இங்கிலாந்து நிறுவனத்திற்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் செய்தி ஒன்று வந்தது. அதிர்ச்சியடைந்த அந்த நிறுவனம் இன்டர்போலுக்கு (InterPol - International Police) தகவல் அளித்தது.
விசாரணையை துரிதப்படுத்தும் இன்டர்போல்:
பின்னர் இதுகுறித்து இன்டர்போல் சம்பந்தப்பட்ட காவல் துறைக்குப் புகார் மனுவுடன் இ-மெயிலில் வந்த மிரட்டல் தொடர்பான தகவல்களை அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் செய்தியானது, ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வந்தது தெரியவந்தது. மேலும் அந்த இ-மெயிலில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் போர் குறித்து இங்கிலாந்து எந்த ஒரு கண்டனத்தையும் தெரிவிக்காமல், பாதிக்கப்பட்ட நாட்டிற்கு எந்தவித உதவியும் செய்யமால் இருப்பது குறித்து குறிப்பிடப்பட்டது. எனவே, இங்கிலாந்திற்கு தேவைப்படும் மருத்துவர்களை அனுப்பும் திட்டத்தை சீர்குலைக்கும் விதமாக தேர்வு நடைபெறும் மையங்களில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக ஆப்கான் பயங்கரவாதிகள் மிரட்டல் அனுப்பியுள்ளனர். அதில் எங்களைத் தடுக்க முயலாதீர்கள்; முயன்றாலும் நிறுத்தமுடியாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து தேர்வு நடைபெறும் நட்சத்திர ஹோட்டல்களில், சென்னை போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. மேலும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால், ஏதேனும் தீவிரவாத அமைப்பினர் இந்த சம்பத்தில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும், வெடிகுண்டு மிரட்டல் வந்த மெயிலின் ஐ.பி. முகவரியை வைத்தும் சம்பந்தப்பட்ட நபரைத் தேடி வருகின்றனர்.
இன்னும் மூன்று நாட்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெறுவதையொட்டி வெடிகுண்டு மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: டிபன் பாக்ஸில் வெடிகுண்டு; குழந்தைகளுக்கு குறி ?