சென்னை தலைமைச் செயலகத்திற்கு அடையாளம் தெரியாத நபரால் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதன் எதிரொலியாக, இன்று ப்லோரா என்ற மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்திற்குள் வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் உரிய சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; ஒருவர் கைது - bomb threat in tamilnadu assembly
சென்னை: தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
முதலமைச்சர், துணை முதலமைச்சர் இல்லங்கள், தலைமைச் செயலகம் போன்ற முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபரை தற்போது காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: உடைந்தது இதயகோயில்... உதிர்ந்தது ரோஜா- முறிந்த மணிரத்னம், வைரமுத்து கூட்டணி!