சென்னையில் பாஜக சார்பில் காஞ்சி கோட்ட மண்டலங்களின் தேர்தல் பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டம் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. பாஜகவின் காஞ்சி மாவட்ட நிர்வாகிகள் பங்குபெற்ற இக்கூட்டத்தில், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
பியூஸ் மானுஷுடன் ஏற்பட்டது தள்ளுமுள்ளு... யாரும் அவரை அடிக்கவில்லை - தமிழிசை - பியூஸ் மானுஷுடன் தள்ளுமுள்ளு
சென்னை: பியூஸ் மானுஷ் அத்துமீறி அலுவலகத்துக்குள் நுழைந்ததால்தான் தள்ளுமுள்ளு ஏற்பட்டதே தவிர, யாரும் அவரை தாக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், “ 370 சட்டப்பிரிவை நீக்கி காஷ்மீரில் மறுசீரமைப்பு ஏற்படுத்தியதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் 370 சிறிய கூட்டங்களும், 35a பிரிவை நீக்கியதை குறிக்கும் வகையில் 35 மிகப் பிரம்மாண்ட கூட்டங்களும் பாஜக சார்பில் நாடு முழுவதிலும் நடத்தப்படவுள்ளது. காஷ்மீர் விவகாரத்தை வேண்டுமென்றே அரசியல் காரணங்களுக்காக, திமுக போன்ற கட்சிகள் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பியூஸ் மானுஷ் பாஜக அலுவலகத்தில் நுழைந்தது குறித்து மற்றவர்களெல்லாம் ஏதோ சத்தியாகிரகம் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாஜக தொண்டர்கள் தானாக முன்வந்து வன்முறையில் ஈடுபடவில்லை. வேண்டுமென்றே வரம்பு மீறி அலுவலகத்தில் புகுந்ததால் தான், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. சாதி கலவரத்தைக் கட்டுப்படுத்துவது காவல்துறையினர் கடமை. திமுக தலைவர் ஸ்டாலின் பல வருடமாகத் தலைவர் பதவி கிடைக்கும் என்று கலைஞர் இருக்கும்போதே எதிர்பார்த்தார்.ஆனால், கலைஞர் இறந்த பிறகுதான் கிடைத்தது. இருந்தும் என்ன சாதனை செய்துவிட்டார். வெளிநடப்பு செய்வதெல்லாம் ஒரு சாதனையா?”, என்று கூறினார்.